என் கிறுக்கல்களில் சில

ற ர ண 2 சுழி 3 சுழி அப்படி இப்படின்னு நிறைய பிழைகள் இருக்கும்.. பொறுத்தருள்க :) என்ன செய்ய பாழாய்போன Translator.Only LIMITED NUMBERS are SHOWN here, VIEW the rest of KIRUKKALS in ARCHIVES. **Click on kirukkal images to ENLARGE.

Monday, January 30, 2006

கலையாத நினைவுகள்

T நகர் ரெங்கனாதன் தெரு ... சரவணா ஸ்டோர்ஸ்.. ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கு பார்த்தாலும் மேன்சன்கள்.தேன்கூடு போன்ற அறைகள். ஒன்றில் நானும் நன்பர்களும் பக்கத்தில்தான் சரவணபவன் அங்கு சாப்பிடத்தான் காசு இருந்ததில்லை.

பையில் பைசா இருந்தால் Morning இட்லி/தோசை இல்லை என்றால் பந்தாவாக மாடர்ன் Bread தொட்டுக்கொள்ள Jam or பாக்கெட் ஊறுகாய். சில நன்பர்கள் காலையில் சாப்பிட்டதே இல்லை, சத்தியமா !!

இப்படித்தான் ஆரம்பித்தது என் வேலை தேடும் படலம். அண்ணா நகரில் ஏதொ Opening இருக்காமே அங்க Apply ப்ன்னியா மச்சி ? போன வாரம் attend பன்ன Interview என்ன ஆச்சி ? நேத்திக்கி Written Test எப்டி ? ஒருவருகொருவர் இப்படி குசலம் விசாரித்துக்கொண்டே காலம் போனது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லுவாங்க. உண்மைதான். நான் பிறந்த மண் என்னையும் சிறிது காலம் அரவணைத்துக்கொண்டது. எங்கே இருந்து வந்தாலும் தலைநகரில் எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம். பெங்களூர் மாதிரி இல்லை. எதை எடுத்தாலும் யானை விலை குதிரை விலை.

அப்போதெல்லாம் மெரீனா தான் சொர்க்கம். பரந்து விரிந்த அழகான கடற்கரை. காலார நடந்து சென்று அப்படியே கரையில் மல்லாந்துகொள்வோம்.

என்ன பகையோ கடலுக்கும் கரைக்கும் !!! தினம் தின்ம் மோதிக்கொள்ளும். :) அலைமோதும் சத்தமும் சில்லென்ற கடற்கரைக் காற்றும் இன்று நினைத்தாலும் மறக்கமுடியாத சுகம். வேலை தேடி அலைந்த சோகம், சோர்வு எல்லாம் பறந்தே போகும். இதில் பை கணமாய் இருக்கும் போது துப்பாக்கி சுடுதல் போட்டி வேறு மெரீனாவில், எனக்கும் செந்திலுக்கும். ஏதோ நாளையே STFல் சேர்த்துக்கொள்வது போல இருவரும் பலூன்களை சுட்டுத்தள்ளுவோம்.

நிறைவாக இருக்கிறது கடந்த கால நினைவுகளை அசை போட்டுப் பார்க்கையில்

..... கதை மேலும் வளரும்

- வீனா சானா

Monday, January 23, 2006

ஐஸ்க்ரீம் பெண்ணே

Aaaa haaaa

Wednesday, January 18, 2006

அவளும் அவனும்..

Wednesday, January 11, 2006

பொங்கல்

Wednesday, January 04, 2006

ஓம் Googleயாய நமஹ :)

தினம் தினம் பூமழைதான்

KirukkalS
பார்வைகள் இதுவரை.
என்றும் அன்புடன்,
வித்யாசங்கர்

Brea, CA